News Just In

11/09/2020 11:37:00 AM

வீட்டில் இருந்து கொண்டே கூட்டு வழிபாடு செய்யுங்கள்- கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு!!


(படுவான் பாலகன்) 
கொரோனா தொற்றில் இருந்து நீங்கி ஆரோக்கியமாகவும், சந்தோசமாகவும் வாழ்வதற்காக வீட்டில் இருந்தவாறே அனைவரும் ஒரே நேரத்தில் வழிபாடுகளில் ஈடுபடுங்கள். அவ்வாறு ஒரேநேரத்தில் செய்யும் வழிபாடு கூட்டு வழிபாடாகும். கூட்டாக இணைந்து நாம் செய்யும் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும் என கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இன்று(08) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமத்தினைத் தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், உலகெங்கும் பரவியிருக்கும் கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கு, இறைவனால் சுகாதார துறையினர் மூலமாக சொல்லப்பட்டிருக்கின்ற சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். உடலும், உள்ளமும் சுத்தமாக இருக்கின்ற போது எவையும் எம்மை நெருங்காது.

இதனைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார துறையினரும், பாதுகாப்புதுறையினரும், ஊடகவியலாளர்களும் அயராது சேவை செய்கின்றனர். அவர்களை பாராட்ட வேண்டும். அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேணண்டும். இத்தருணத்தில் நாம் அனைவரும் பொறுப்புடனும், உணர்வுடனும் செயற்பட வேண்டும். எம்மையும், உறவினரையும், எம்சமூகத்தினரையும், நாட்டில் உள்ளவர்களையும் நோயில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம் என்றார்.

No comments: