News Just In

11/04/2020 08:51:00 AM

கிழக்கு மாகாணத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்வு முழு விபரம் வெளியாகியது!!


கிழக்கு மாகாணத்தின் கொரோனா நிலை தொடர்பான முழு விபரம் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் அவர்ள் வெளியிட்டுள்ளார்.

நேற்று வரையான காலத்தில் கிழக்கு மாகாணத்தின்

1. திருகோணமலை மாவட்டம்- குச்சவெளி பிரதேசத்தில் ஒருவரும், தம்பலகாமம் பிரதேசத்தில் ஒருவரும், திருகோணமலை பிரதேசத்தில் 5 பேரும், மூதூரில் 6 பேருமாக மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 931பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் இவர்களில் 783 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

2. மட்டக்களப்பு மாவட்டம்- கோறளைப்பற்று மத்தியில் 35 பேருக்கும், ஓட்டமாவடியில் ஒருவருக்கும், கிரானில் ஒருவருக்கும், காத்தான்குடியில் ஒருவருக்கும், வெல்லாவெளி ஒருவருக்கும், பட்டிப்பளை ஒருவருக்கும், களுவாஞ்சிகுடியில் ஒருவருக்குமாக மொத்தம் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 3666பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1103 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

3. அம்பாறை மாவட்டம்- தெஹியத்தகண்டிய பகுதியில் 2 பேருக்கும், பதியத்தலாவ பகுதியில் 2பேருக்கும், அம்பாறை பிரதேசத்தில் ஒருவருக்கும், தமன்ன பிரதேசத்தில் ஒருவருக்குமாக மொத்தம் 6பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 292 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 208 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

4. கல்முனை பிராந்தியம்- பொத்துவில் பகுதியில் 7 பேருக்கும், கல்முனை தெற்கு பிரதேசத்தில் 5பேருக்கும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒருவருக்கும், சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒருவருக்கும், இறக்காமம் பிரதேசத்தில் 4 பேருக்குமாக மொத்தம் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 387 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 170 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தகவல்களின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மக்கள் அவதானமாக செயற்படுமாறும், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும், சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண மக்களுக்கு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










No comments: