இக் கோரிக்கையினை கருத்திற் கொண்ட அரச அதிபர் அவசர கூட்டம் ஒன்றினை இன்று(09) கூட்டினார். இது தொடர்பாக சம்மந்தபட்ட திணைக்கள அதிகாரிகளுடன் ஆற்றுவாய் வெட்டுவது தொடர்பான சாதக பாதக நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இவ்வாண்டு பருவகால மழைவீழ்ச்சி இன்று வரையும் போதுமானதாக காணப்படாமையினால் சற்று தாமதமாக ஆற்றுவாய் வெட்டுவதன் ஊடாகவே நிலத்தடி நீரினை பாதுகாத்து கொள்ளமுடியும் என அதிகாரிகளினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாய மற்றும் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் விவசாயிகளின் பயிர்கள் நீரினால் மூழ்கிக்காணப்பட்டு அழிவுறும் நிலைமையில் உள்ளதாகவும் இதில் தங்களுடைய வாழ்வாதாரம் தங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர. உடனடியாக ஆற்றுவாயினை வெட்டி நீரின் தாக்கத்தினை குறைத்துத்தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அதே போன்று மீனவ சங்கங்களின் பிரதிநிதி கருத்து தெரிவிக்கையில் நீர்மட்டம் குறைவாக காணப்படுகின்ற நிலைமையில் ஆற்றுவாயினை வெட்டிவிடுகின்றபோது நன்னீர் மீன்கள் கடலினுள் செல்வதனால் தங்களுடைய தொழில் பாதிப்பு ஏற்படும் எனவும் இதை சற்று நீர்மட்டம் அதிகரிக்கும் போது வெட்டிவிடுவதன் மூலம் தங்களுடைய தொழில் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் இறுதித் தீர்மானமாக 6 பேர் கொண்ட ஒரு குழு அரசாங்க அதிபரினால் நியமிக்கப்பட்டு அவர்களின் தொழிநுட்ப அறிக்கையினை 3 தினங்களுக்குள் சமர்ப்பிக்கும் சந்தற்பத்தில் சாதக பாதக நிலைமைகளை கருத்திற்கொண்டு தீர்மானங்களை எட்டமுடியுமென அரசாங்க அதிபரினால் குறிப்பிடப்பட்டது.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் கே.ராஜகோபாலசிங்கம், மீன்பிடித்திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் குரூஸ் ருக்சாந், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் சசிநந்தன், கடலோர பாதுகாப்பு சபையின் பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள்;, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் உதவி பணிப்பாளர், கமநல சேவைத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்; கே. ஜெகநாத், மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.










No comments: