News Just In

11/06/2020 10:15:00 AM

இன்றுடன் நிறைவடையும் 2020ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள்...!!


2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பரீட்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஜெனரல் சனத் பி. பூஜித தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 2,648 பரீட்சை நிலையங்களில் 362,824 பரீட்சார்த்திகள் இம்முறை உயர்தரப் பரீட்சையை எழுதியுள்ளனர்.

ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதர பரீட்சை 22 நாட்களுக்கு பின்னர் வெற்றிகரமாக இன்றுடன் நிறைவடையவுள்ளதாகவும், பரீட்சைகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் சனத் பி. பூஜித குறிப்பிட்டார்.

No comments: