இதற்கமைய தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளதுடன், சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 1350 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, பொரளை பொலிஸ் நிலையத்தில் 41 பொலிஸ் அலுவலர்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பொரளை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் இதுவரையில் 56 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று பதுளை மாவட்டத்தில் மொத்தமாக இதுவரையில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு 2 ஆயிரத்து 193 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் இதுவரையில் 34 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: