பிரதேச செயலாளரின் தலைமையில் செயற்படும் பிரதேச கொவிட் குழு மற்றும் கிராம உத்தியோகத்தரின் தலைமையிலான கிராமிய கொவிட் குழுவினை வலுப்படுத்தல் இன்றியமையாததாகும். மக்களின் இயல்பு வாழ்க்கையை கெடாதவகையில் கொவிட் 19 அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட மக்களை அறிவுறுத்துமாறு இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்வதாயின் அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரமே செல்ல முடியும். மாவட்டத்திற்கு உள்நுழையும் நான்கு பிரதான வழிப்பாதைகளில் வழித்தடைகள் ஏற்படுத்தப்பட்டு மாவட்டத்திற்கு உள்நுழைதல் மற்றும் வெளிச்செல்லல் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஏ.அனஸ், பிரதேச செயலாளர்கள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




No comments: