News Just In

10/03/2020 02:32:00 PM

சிறுவர் தினத்தை முன்னிட்டு Haamaa நிறுவனத்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 59 சிறுவர்களுக்கு 1000 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கி வைப்பு!!!

மட்டக்களப்பு நகரில் உள்ள HAAMAA நிறுவனமானது சிறுவர் தினத்தை மிக விமர்சையாக நேற்று(2020.10.02) செவ்வாய் கிழமை மாலை 4 மணியளவில் கொண்டாடியது. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட போலிஸ் அதிகாரி திரு.L.R.குமாரசிறி, மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் திரு.தேசபந்து முத்துக்குமார் செல்வராஜா, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி ஆலோசகர், Haamaa நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில், சிறுவர் தினத்தை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 59 சிறுவர்களுக்கு 1000 ரூபாய் பெறுமதியான வவுச்சர்கள் ஹாமா நிறுவனத்தால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறுவர் நேய மாநகர திட்டம் தொடர்பிலும், மட்டக்களப்பு மாநகரில் சிறுவர் உரிமைகளை காட்சி படுத்துவது தொடர்பிலும், சிறுவர்களை பெற்றோர் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

இதேவேளை, இந்நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க தலைவர் தனது வாழ்த்துரையில் சிறுவர்களுக்கு சிறுவர் தின வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ஹாமா நிறுவனத்தின் முகாமையாளர் சிறுவர்களுக்காக சிறுவர் தினத்தை முன்னிட்டு வழங்கிய வவுச்சர் கொடுப்பனவுகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வை ஒழுங்குபடுத்திய haamaa நிறுவனமானது குறுகிய காலத்தில் மட்டக்களப்பு நகரில் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும் தற்போது இந்நிறுவனமானது வர்த்தக துறையில் பெரும் வளர்ச்சி கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.















No comments: