தன்னாமுனை விபுலானந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஞானசிங்கம் ஜீவானந்தம் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் ஏறாவூர் பகுதில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காரும் மட்டக்களப்பில் இருந்து ஏறாவூர் பகுதிக்கு சென்ற மோட்டர்சைக்கிளும் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர்சைக்கிள் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதில் உயிரிழந்தவரின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டதுடன் இவரின் சகோதரர் இதே இடத்தில் கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் விபத்தில் உயிரிழந்துள்ளாரென பொலிசார் தெரிவித்தனர்.
இதையடுத்து காரை ஒட்டிச் சென்றவரை கைது செய்து இன்று திங்கட்கிழமை (05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ. றிஸ்வான் முன்னிலையில் ஆஜரர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 19 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No comments: