கடந்த ஜனவரி மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தின் செயலராக பதவி ஏற்ற கலாமதி பல்வேறு மக்கள் பிரச்சினைகளை நேரில் சென்று தீர்வு கண்டதாக பரவலாக பாராட்டப்பட்டு வந்தது.
அதேவேளை நுண்கடன் நடவடிக்கைக்கு எதிராக தீவிர போக்கினையும் அவர் கைக்கொண்டு வந்திருந்தார்.
இதனிடையே அத்துமீறிய நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் வெளியிட்ட கருத்தின் தொடராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவி மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் கருத்துரைத்த அவர்,
அரச உத்தியோகத்தகர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் சோர்ந்து போகவும் கூடாது சோரம் போகவும் கூடாது. பொது மக்களுக்கான சேவைகளை உடனுக்குடன் வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

No comments: