News Just In

10/02/2020 05:32:00 AM

மட்டக்களப்பு- வாழைச்சேனையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் 35 வயதுடைய நபர் ஒருவர் நேற்று  வியாழக்கிழமை 01 ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும், வாழைச்சேனை பொலிஸாரும் இணைந்து குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 520 மில்லி கிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: