News Just In

10/03/2020 09:01:00 AM

மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட போட்டிகள் நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பமானது!!


மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பூப்பந்தாட்ட போட்டியானது சங்கத்தின் தலைவர் பேரின்பராஜா தலைமையில் நேற்று (2020.10.02) மாலை 6மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ சாணக்கியன் அவர்களும் சிறப்பு அதிதியாக சிரேஷ்ட சட்டத்தரணி வினோபா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்ற திரு.சாணக்கியன் அவர்கள் தனது உரையில் இப்போட்டிகள் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இவ் உள்ளக அரங்கில் காணப்படும் சிறு குறைகளை நிவர்த்தி செய்து தருவதாகவும், எதிர்காலத்தில் விளையாட்டு அமைச்சிடம் இருந்து சில உதவிகளை பெற்று தருவதாகவும் வாக்களித்தார். அத்தனைத் தொடர்ந்து சிறப்பு அதிதி உரை நடைபெற்றது.

இதன் பின்னர் விளையாட்டு நிகழ்வுகளை அதிதிகள் உத்தியோக பூர்வமாக வீரர்களின் அறிமுகத்துடன் ஆரம்பித்து வைத்தனர். இவ் விளையாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து வீரர்களும் இன, மத பேதமின்றி கலந்து கொண்டமை ஓர் சிறப்பம்சமாகும்.

இப்போட்டியானது பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் 2,3,4ம் திகதிகளில் நடைபெற்று இறுதி போட்டியானது 4ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியை கண்டுகளிக்க அனைவரையும் வருமாறு BDBA அன்புடன் அழைக்கிறது.

இப்போட்டிகளுக்கான இணையத்தள ஊடக அனுசரணையை எமது ஊடகமான VTN NEWS வழங்குவதில் பெருமை கொள்கிறது.








No comments: