News Just In

10/06/2020 11:37:00 AM

உலக சனத்தொகையில் பத்தில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிப்பு- உலக சுகாதார ஸ்தாபனம்!!


உலக சனத்தொகையில் 10 சதவீதமானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் குறித்த அமைப்பின் அவசர நிலை பிரிவின் தலைவர் michael ryan கருத்துரைக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்ந்தும் விரிவடையுமெனவும் அத்துடன், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்றவும் வழிகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: