News Just In

10/05/2020 11:14:00 AM

ஊரடங்கு சட்டம் மற்றும் கொரோனாவின் தற்போதைய நிலை தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!!


கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினாலேயே 3 பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினாலேயே 3 பொலிஸ் பிரிவிற்கு மாத்திரமே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் இப்பகுதிகளுக்கு கடந்த 7 நாட்களுக்குள் வருகை தந்த பலர் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஊழியர்களை சந்திப்பதற்காக இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்து மக்கள் வருகை தந்துள்ளதாக அறிய கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் இவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வரையில் எவ்வாறான நிலமை என கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தியவசிய தேவையின்றி வௌியே செல்ல வேண்டாம். எதிர்வரும் 72 மணித்தியலாங்களுக்குள் நாங்கள் இதனை இனங்கண்டு கொள்ளும் வரையில், யாரேனும் இப்பகுதிகளுக்கு வருகை தற்திருந்தால் அதனை மறைக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுமாறும் நீங்கள் செய்தவை உங்களுக்கே தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: