இன்று கொண்டாடப்படும் சிறுவர் தின நிகழ்வும், 2020ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட செயன்முறையுடனான கருத்தரங்கும் மட் / சிவானந்த தேசிய பாடசாலையில் இன்று (2020.10.01) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் திஜாகராஜா சரவணபவன் அவர்கள் கலந்து கொண்டு சிறுவர்களுக்கு சிறுவர்தினத்துக்கான வாழ்த்துக்களையும் நடைபெறவுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இத்துடன் மேலும் கருத்து தெரிவித்த முதல்வர் மட்டக்களப்பு மாநகர சபையால் சிறுவர்களுக்கு மேற்கொள்ளப்படும் விசேட திட்டங்கள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாநகரத்தை சிறுவர் சிநேக மாநகரமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்பிலும் மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து மட்/சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் மட்/விவேகானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவர்களுக்காக மட்/சிவானந்தா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது விசேட கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டது.
இக் கருத்தரங்கினை G.N.N.Promo.com(Gunam- கனடா) நிறுவனத்தின் நிதியுதவியுடன் கல்வி அபிவிருத்தி சங்கம்( EDS) அமுல்படுத்துகின்றது.
குறித்த கருத்தரங்கில் சிவானந்தா தேசிய பாடசாலையின் பாடசாலை உப அதிபர்கள், சிவானந்தா பாடசாலை ஆசிரியர்கள், விவேகானந்தா பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந்த விசேட கருத்தரங்கின் வளவாளர்களாக கல்குடா ஆசிரிய ஆலோசகர் திருமதி.E.V.கனகரெட்ணம், திருமதி.செள.அருளேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வளவாளர்கள் தமது கருத்தரங்கை ஆரம்பித்தனர்.


















No comments: