குறித்த இளைஞர்களில் இரண்டு பேர் தலவாக்கலையை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் பதுளை- நமுனுகுலயை சேர்ந்தவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நீராட சென்ற மூன்று இளைஞர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்
நீர்கொழும்பு– கம்மல்தொட்ட முகத்துவாரம் கடற்பகுதியில் நீராட சென்று காணாமல் போன 3 இளைஞர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று (சனிக்கிழமை), கம்மல்தொட்ட முகத்துவாரம் கடற்பகுதிக்கு, 7 இளைஞர்கள் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் மூன்று பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியிலுள்ள நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த நிலையில் இந்த அனர்ந்தம் நேர்ந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே காணாமல் போனவர்களை தேடும்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: