News Just In

10/04/2020 08:51:00 PM

மட்டக்களப்பில் காய்ச்சலினால் சிகிச்சை பெற்று வந்த 13 வயது மாணவன் மரணம்!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் இன்று (4) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்று வரும் 13 வயதுடைய, பதுரியா குறுக்கு வீதி பிறைந்துறைச்சேனையை சேர்ந்த சமீம் முகம்மட் சஜாத் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலே குறித்த மாணவன் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: