இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான கட்டுமுறிவு, ஆண்டான்குளம் கிராமங்கள் குறிப்பிடத்தக்கன.
கனடியத் தமிழர் அறக்கட்டளை (CTCT) நித்தியமானது மேற்படி கிராமங்களை தத்தெடுத்து அப்பகுதியில் சில அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முன்னாயித்த பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது.
குமுகாய மேம்பாட்டு மன்றம் (SAFE), மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கம் (EDS) என்பவற்றுடன் இணைந்து மேற்படி செயல் திட்டத்தை அமுலாக்க CTCT அமைப்பு ஆயுத்தமாகியுள்ளது.
இதன் முதல் கட்டமாக பிரதேச மக்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு கட்டுமுறிவுக்குளம் GTMS பாடசாலை அதிபர் திரு.G.ஜீவனேஸ்வரன் தலைமையில் நேற்று (2020.09.20) கட்டுமுறிவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் SAFE நிறுவனத் தலைவரும் மட்டக்களப்பு மாநகர முதல்வருமான திரு.தி.சரவணபவன் அவர்களுடன் SAFE அமைப்பின் உபசெயலாளர் திரு.ம.சுரேஸ்கரன், மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்க(EDS) ஸ்தாபக தலைவர் திரு.S.தேவசிங்கன் ஆகியோர் CTCT அமைப்பு சார்பாக பங்கு கொண்டனர்.
பிரதேச மக்கள் சார்பில் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மீனவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள், மாதர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்தி சபையினர், பாடசாலை பழைய மாணவர் அமைப்புகள் கலந்து கொண்டன.
கிராம அபிவிருத்தி சங்கம், மீனவர் சங்கம், விவசாய அமைப்புகள், பாடசாலை அபிவிருத்தி சபை, பழைய மாணவர் அமைப்புகள் போன்றவற்றின் பிரதிநிதிகள் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களும் ஆலோசனைகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு மாநகர முதல்வரால் தீர்வுகளும் உறுதிமொழிகளும் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கள விஜயத்தை மேற்கொண்ட குழுவினர் கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டனர்.
















No comments: