News Just In

9/21/2020 10:17:00 AM

புகையிரதத்தில் மோதி 21 வயது இளைஞன் பலி!!


கிளிநொச்சி - ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இன்று காலை 8 மணியளவில் புகைரதம் மோதியதில் 21 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி புகையிரத்தில் மோதியே ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலத்தை புகையிரத ஊழியர்கள்கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். குறித்தசம்பவத்தில் கிளிநொச்சி மலயாளபுரம் பகுதியை சேர்ந்த

21 வயதுடைய யோகேந்திரன் அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.

No comments: