தமது ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, செப்டெம்பர் 22 ஆம்திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம்திகதி வரை தனிமைப்படுத்தல் நோக்கத்துக்காக இவ்வாறு தூதரகத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏதேனும் அவசர சேவைகளைப் பெற்றுக்கொள்வதாயின் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கங்களை தூதரகம் அறிவித்துள்ளது.
அவசர தேவைகளுக்காக consular.doha@mfa.gov.lk என்ற மின்னஞ்சலின் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும், துணைத்தூதரகம் தொடர்பான விவகாரங்களுக்கு 74703413 என்ற இலகத்தையும் தொழிலாளர்கள் சார்ந்த விடயங்களுக்காக 70088771 என்ற இலக்கத்தையும் தொடர்புகொள்ள முடியும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவித்துள்ளது.

No comments: