News Just In

9/24/2020 05:10:00 AM

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி!!


வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நாரஹென்பிட்டி அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பயனாளி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி இன்று இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நாரஹென்பிட்டி அலுவலகத்தின் அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் தமது கடமைகளை செய்யத் தவறியுள்ளதாக குறித்த முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், போதுமான ஊழியர்கள் இல்லையெனவும் அதன் காரணமாக தாங்கள் கடமைகளைச் செய்யவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய, வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நாரஹென்பிட்டி அலுவலகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, பொது மக்களின் தேவைகளை திறம்படச் செய்வதே அரச அதிகாரிகளின் முதன்மையான பொறுப்பு என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

No comments: