டெங்கு நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மாணவர்களைக் கொண்டு சமூகத்திற்கு ஊட்டப்பட்டு வருகின்றன.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின் பணிப்புரைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய மாணவர்களினால் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் இடம்பெற்றது.
பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியேரின் பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றதுடன் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
வித்தியாலய சுகாதார ஆலோசனை குழு செயலாளரும் வித்தியாலய உடற்கல்வி பொறுப்பாசிரியருமான மேனகா மெயின் ஒழுங்கமைப்பில் வித்தியாலய அதிபர் எஸ். ரவிதேவன் தலைமையில் இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர் மலர்விழி சிவஞான ஜோதி உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.








No comments: