News Just In

9/09/2020 07:26:00 PM

வங்கிகளில் கடன் பெறுவோருக்கு பிரதமர் அறிவித்துள்ள விசேட சலுகைகள்!!


பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு கடன் வழங்குவதில் தளர்வான கொள்கைகளை பின்பற்றுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அரச வங்கிகளின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நிதியமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடன்களை மீளச் செலுத்துவதில் சிரமப்படுபவர்களும் புதிதாக கடன்களைப் பெற்றுக்கொள்ள வருபவர்களும் தேவையின்றி சிரமத்திற்கு ஆளாகக்கூடாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தின்போது கட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரம் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய, குறித்த விடயத்தை ஆராய்ந்து எந்தவொரு அரசியல் வேறுபாடும் இன்றி அனைத்து குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இதன்போது வலியுறுத்தினார்.

No comments: