News Just In

5/20/2025 06:51:00 PM

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் விபரீத முடிவெடுத்த பட்டதாரி இளைஞன்


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் விபரீத முடிவெடுத்த பட்டதாரி இளைஞன்



மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தை சேர்ந்த 29 வயதான இளைஞன் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனது வீட்டின் அறையில் இன்று அதிகாலை ( 20) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுவயதில் தாய் தந்தையரை இழந்து வாழ்ந்து வந்த பட்டதாரியான இளைஞனின் திடீர் மரணம் அம்பிளாந்துறை கிராமத்தில் சோகத்தை ஏற்ப்படுத்திதுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: