யுத்தத்தில் ஈடுபட்டமையின் எதிரொலி : மகளுக்காக புலம்பி திரியும் சவேந்திர சில்வா
இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சர்வதேச ரீதியில் அண்மைகாலமாக கண்டனங்கள் வலுத்து வருகின்றது.
இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட நிலையில், இது தொடர்பில் நீதி கோரி சர்வதேச நாடுகள் தமிழ் தரப்பு மக்களுக்காக குரல் கொடுத்து வருவதுடன் சர்வதேச விசாரணை உரிய முறையில் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கு தன்னால் ஆன நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் எடுத்து வருகின்ற நிலையில், பிரித்தானியாவில் (United Kingdom) போர்க் குற்றவாளிகளை ஆதரித்தார் என்ற அடிப்படையில் இலங்கை (Sri Lanka) பாடகி யோஹானிக்கு (Yohani) எதிர்ப்பு எழும்பியுள்ளது.
யோஹானி தனது தந்தை மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா (Prasanna de Silva) உட்பட போர்க்குற்றவாளிகளாக தடைவிதிக்கப்பட்டவர்களை பாராட்டியமையே இந்த எதிர்ப்புக்கு காரணமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
5/20/2025 08:57:00 AM
யுத்தத்தில் ஈடுபட்டமையின் எதிரொலி : மகளுக்காக புலம்பி திரியும் சவேந்திர சில்வா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: