
ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், 3 ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு SU-30 போர் விமானம் உட்பட இந்திய விமானப்படையின் 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்தது.
இந்நிலையில், ஒபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் விளக்கமளித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒபரேஷன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கையை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியழித்தது.
இதன் காரணமாக இரு நாடுகளும் இடையே சில நாட்கள் போர் பதற்றம் நீடித்தது. இந்தியாவின் எல்லை பகுதிக்குள் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இதனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்த இந்திய இராணுவம், பதிலுக்கு பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து கடந்த மே 10 ஆம் திகதி, இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தன.
ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், 3 ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு SU-30 போர் விமானம் உட்பட இந்திய விமானப்படையின் 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.
இதற்கு இந்திய இராணுவம் மறுப்பு தெரிவித்தது. அடுத்த சில நாட்களில் போர் என்றால் சில இழப்புகள் இருக்க தான் செய்யும் என இராணுவ தளபதி தெரிவித்தார். ஆனால் இந்தியா போர் விமானங்களை இழந்ததா என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடக்கத்தில் பயங்கரவாதிகளின் முகாம்களாக உள்ள உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பப்பட்டது" என தெரிவித்தார்.

அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த கருத்தை, எதிர்க்கட்சியான காங்கிரஸ் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஒபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்னரே தகவல் தெரிவித்ததால், இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்திக்கு விளக்கமளித்த வெளியுறவு அமைச்சகம், ஆரம்பத்திலேயே பாகிஸ்தானை எச்சரித்தோம். இது ஒபரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகு ஆரம்ப கட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடங்குவதற்கு முன்பு என தவறாக சித்தரிக்கப்படுகிறது என தெரிவித்தது.
இதில் போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீடு குறித்து கேள்வி எழுப்பிய போது, இரு நாடுகளின் தரப்பில் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பேசி முடிவெடுக்கப்பட்டது என தெரிவித்தார்.
மேலும், ஒபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் எத்தனை போர் விமானங்கள் சேதமடைந்தது என கேட்கப்பட்டதற்கு, 'பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த தகவல்களை வழங்க இயலாது' என தெரிவித்தார்.
No comments: