
யாழில் உள்ள பெண்கள் பாடசாலை ஆசிரியை ஒருவரின் அந்தரங்க காணொளி சிங்கள தவறான இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த ஆசிரியை திருமணம் முடிப்பதற்கு முன்னர் தன்னோடு பாடசாலையில் ஒன்றாக கற்ற ஒருவனை காதலித்து வந்த நிலையில், நபரின் மோசமான பழக்கவழக்கங்களால் காதலை முறித்துக் கொண்டதாகத் தெரியவருகின்றது.
இதன் பின் ஆசிரியைக்கு 2021ம் ஆண்டளவில் ஆசிரியை வேலை கிடைத்து பின்னர் ஆசிரியைக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஒன்றை முன்னாள் காதலன் குழப்பியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸ் நிலையம் வரை சென்று நீதிமன்றில் வழக்கும் நடைபெற்றுள்ளது. பின்னர் முன்னாள் காதலன் 2023ம் ஆண்டு காலப்பகுதியில் கனடாவுக்கு சென்ற பின்னரே ஆசிரியைக்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆசிரியையின் அந்தரங்க காணொளி சிங்கள தவறான இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை அந்தரங்க காணொளி காட்சிகளை வைத்தே முன்னாள் காதலன் ஆசிரியையின் திருமணத்தை குழப்பியதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments: