News Just In

9/22/2020 04:11:00 PM

20 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்!!


இலங்கையில் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பில் 20 ஆவது திருத்த வரைபிற்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

20 ஆவது திருத்தத்தை வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்ற முடியாது என்று சவால் விடுத்து சிறப்பு விண்ணப்பம் ஒன்றினை இன்று தாக்கல் செய்துள்ளார்.

ஒரு வார காலத்தினுள் இதற்கு எதிராக யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் 21 நாட்களுக்கு 20வது திருத்தம் தொடர்பாக எந்த முன்னெடுப்பையும் நாடாளுமன்றத்துக்குள் முன்னெடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: