News Just In

9/18/2020 07:59:00 AM

20வது திருத்தத்தை உருவாக்கியது யார் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவேண்டும்- ஜேவிபி வேண்டுகோள்!!


20வது திருத்தம் நிறைவேறுவதற்கு முன்னரே அமைச்சரவை அரசாங்கத்தின் கைப்பொம்மையாக மாறியுள்ளது என ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.
ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத் இதனை தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தின் உருவாக்கத்துக்கு எவரும் உரிமை கோரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

29வது திருத்தத்தை உருவாக்கியது யார் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் 20வது திருத்தம் சாதகமானது என அவர்கள் கருதினால் ஏன் அரசாங்க உறுப்பினர்கள் அதற்கு உரிமை கோர மறுக்கின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

20வது திருத்தத்தின் நகல்வடிவை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் ஐந்து அமைச்சர்கள் உள்ள போதிலும் இவர்களில் ஐவர் இதற்கு முன்னர் 20வது திருத்தத்தை அங்கீகரித்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 20வது திருத்தத்தினை ஆராயமல் அமைச்சர்கள் அங்கீகரித்துள்ளனர் என்பது புலனாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: