News Just In

9/26/2020 02:25:00 PM

மட்டக்களப்பு- வின்சன் பெண்கள் உயர்தர பாடசாலையின் 200ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள்!!


மட்டக்களப்பு- வின்சன் பெண்கள் உயர்தர பாடசாலையின் 200ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (2020.09.26) காலை 9மணிக்கு நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது பாடசாலையின் குரோப்ட் கேட்போர் கூடத்தில் பாடசாலையின் அதிபர் திருமதி தவதிருமகள். உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது மாணவர்களின் அணிநடை மரியாதையுடன் விருந்தினர்களை அழைத்துவரும் நிகழ்வுடன் ஆரம்பமானது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தபால் சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராசாங்க அமைச்சர் S.வியாழேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி.K.பத்மராஜா, மாகாண கல்வி திணைக்கள அதிகாரி திரு.T.A.நிஷாம், மட்டக்களப்பு மாநகர முதல்வர் திரு.தி.சரவணபவன் ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் திரு.V.தவராஜா. மட்டக்களப்பு வலய கல்வித் பணிப்பாளர் S.குலேந்திரகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் V.வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இத்துடன் இந்நிகழ்வில் வின்சன் தேசிய பாடசாலையின் பழைய அதிபர்கள், பழைய ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், மற்றும் பாடசாலையில் தற்போது கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் இதற்போதைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தன.

நிகழ்வானது மங்கள விளக்கேற்றல். வரவேற்புரை, ஆகியவற்றுடன் தொடக்கி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டது. இத்துடன் வின்சன் பாடசாலையின் 200ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட விசேட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கெளரவிப்பும், பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பாடசாலையின் வளர்ச்சி தொடர்பிலும் இப்பாடசாலை பெண்களின் வாழ்க்கையில் நிகழ்த்தி வரும் அற்புதங்கள் தொடர்பிலும் தமது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வின்சன் மகளீர் உயர்த்தர பாடசாலையின் 200ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக புதிய ஞாபகார்த்த முத்திரை தபால் திணைக்களத்தால் வெளியிடப்பட்டது. இதனை இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வெளியிட்டு வைத்தார்.





















No comments: