News Just In

7/01/2020 05:15:00 PM

அதிபர் முபீன் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்


(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை - மாவடிச்சேனையைச் சேர்ந்த ஐயூப் முபீன் உயர் நீதிமன்றத்தில் (30) ம் திகதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்கை ஆசிரியர் சேவையில் 2008 ஆம் ஆண்டு நியமனம் பெற்றுக் கொண்ட இவர், 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும், அதிபராகவும் கடமையாற்றினார்.

கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர், மார்க்கக் கல்வியை கற்பதற்காக கிண்ணியா நஜிமுல் ஹுதா அரபுக் கல்லூரியில் இணைந்து கல்வி கற்று மெளலவிப் பட்டம் பெற்றார்.

திருகோணமலை - ரொட்டவெவ பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் வாழைச்சேனை - மாவடிச்சேனை பிரதேசத்தில் பட்டதாரி பெண் ஒருவரை திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: