News Just In

7/01/2020 04:19:00 PM

வாகரை-பனிச்சங்கேணி ஆலய அடிக்கல் நாட்டு விழா

பிரான்ஸ் ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய நிதி அனுசரணையில் மட்டக்களப்பு, வாகரை-பனிச்சங்கேணி ஸ்ரீ நாககன்னி ஆலய அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

பிரான்சில் வசிக்கும் வைரமுத்து அவர்களின் நிதி அனுசரணையில் குறித்த ஆலயத்தின் கட்டுமான வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. 

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிவைத்தார், 

சமூக சேவையாளர் துரைராஜா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராம தலைவர்கள், ஆலய நிருவாக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



















No comments: