குறிப்பாக விவசாயிகள் எதிர்கொள்கின்ற, உரம் மற்றும் நீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அறுவடைக்கு ஏற்ற விலை சந்தைகளில் கிடைக்காமையினால் விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், இதனால் இப்பிரச்சினைகளை தீர்த்து விவசாயிகளைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள், அனுராதபுர மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
இந்த நிலையில், குறித்த தேர்தல் பிரசார நடவடிக்கையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது கேட்டறிந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது

No comments: