
ஏ.எச்.ஏ.ஹீஸைன்
கட்டிடநிர்மாணங்களுக்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களான கல், மண், சீமெந்து,கொங்ரீட் போன்றவற்றின் தரம் மற்றும் விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மண்,மணல் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடத்திற்கானபுதிய கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மட்டக்களப்புதிராய்மடு பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இப் புதிய ஆய்வுகூடம்அமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்காககமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சுமார் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்துள்ளது.
மேலும்இப்பரிசோதனையூடாக விவசாய மண்ணின் தரத்தினை பரிசோதனை செய்து அந்நிலத்துக்குப்பொருத்தமாக பயிர்வகையினை செய்கை செய்வதற்குமான ஆலோசனை வழிகாட்டல்களும் இதனூடாகப்பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடள்பிரதேச விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில்அமைந்துள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடங்களில்மொனராகல, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு மேலதிகமாக கிழக்குப் பிராந்தியத்தில்மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்காக இவ்வாய்வுகூடம்மட்டக்களப்பில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments: