News Just In

6/29/2020 03:44:00 PM

புகைப்படம் எடுக்க நீர்வீழ்ச்சிக்கு சென்ற காதல் ஜோடி- இறுதியில் நேர்ந்த பரிதாபம்


லக்கல-இலுக்கும்புர-சேர எல்ல நீர்வீழ்ச்சியை காண்பதற்காக சென்ற இளைஞன் காணாமல் போனதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடற்படை மற்றும் காவல்துறையினர் இணைந்தே குறித்த தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் மாலை 4.00 மணியளவில் தனது காதலியுடன் புகைப்படம் ஒன்றை எடுப்பதற்காக குறித்த நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு இருவரும் சென்றுள்ளனர். இதன்போது திடீரென இருவரும் எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து விழுந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற நபர்களினால் குறித்த யுவதி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் குறித்த இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இவ்விருவருக்கும் எதிர்வரும் மாதம் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், நேற்றைய தினம் புகைப்படக் கலைஞருடன் திருமணத்திற்கு முன்பதான புகைப்படங்கள் சில எடுப்பதற்காக சேர எல்ல நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் குருநாகல்-பன்சிலுகம பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: