News Just In

5/09/2020 09:50:00 AM

தேசிய காங்கிரஸ் தலைவரின் பெயரில் வெளியான போலி அறிக்கைகள் தொடர்பாக மறுப்பறிக்கை

"அரச ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தை அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் தெரிவித்த கருத்து வரவேற்கதக்கது - முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ்" எனும் தலைப்பு உட்பட சமீபத்தைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் உலா வரும் கடிதங்கள் போலியான முறையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். அந்த கடிதத்திற்கும் தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. அது போலியான கடிதம் என்பதை தலைவரிடம் நேரடியாக கேட்டறிந்து தேசிய காங்கிரஸின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளர் என்ற ரீதியில் அக்கடிதம் பொய்யான கடிதம் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என உமர் லெப்பை நூருல் ஹுதா தெரிவித்தார்.

அம்மறுப்பறிக்கையில் மேலும்,
இந்த கடிதமானது அரசியலில் அதி உச்ச வாங்குறோத்து நிலையை உடைய சிலரின் சதி முயற்சியாகும். போலியான ஒரு கடிதத்தலைப்பை உருவாக்கி அதில் சம்பந்தமே இல்லாத கதைகளை போலியாக சித்தரித்து எழுதி தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் ஒப்பம் இல்லாமல் உத்தியோக பூர்வமான செய்தி தொடர்பாடல் முறையொற்றினுடாக அல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது. இதே போன்று சில தினங்களுக்கு முன்னர் கூட இப்படியான போலி அறிக்கைகள் தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் அறிக்கைகள் என பொதுத்தளங்களில் வெளியிடப்பட்டு வந்தது.

இப்படியான செய்திகளை வெளியிடுவதன் மூலம் வங்குரோத்து நிலை அரசியல்வாதிகள் எதையும் சாதித்து விட முடியாது. தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் பெயருக்கு அபகீர்த்தியை உண்டாக்க நீங்கள் எடுக்கும் எந்த மொக்குத்தனமான முயற்சிகளும் மக்களிடமோ அல்லது தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களிடமோ செல்வாக்கு செலுத்தமாட்டாது. தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் அறிக்கைகள் அவரது முகப்புத்தகம் அடங்கலாக அவரது உத்தியோகபூர்வ தளங்களில் வெளியிடப்படும் என்பதை கூறிவைக்க விரும்புகிறேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: