
மாங்குளம் பணிக்கநீராவி ஏ9 வீதியில் இன்று (08.05.2020) மாலை 4.50 மணியளவில் இடம்பெற்ற கோரவிபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
அனுராதபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த வானும் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியும் நேருக்கு நேர் மோதுண்டதுடன் வான் மீது லொறி ஏறி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: