News Just In

4/19/2020 01:27:00 PM

ஊரடங்குச் சட்டமும் மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தின் தற்போதைய நிலையும்

(வவுணதீவு எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்கில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் படுவான்கரை பிரதேசத்தில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் மற்றும் விவசாயிகள் தவிர்ந்த ஏனையோர் ஊரடங்குச் சட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளதனை அவதானிக்கமுடிந்தது.

அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை இந்த பிரதேசத்திலுள்ள பிரதான வீதிகளில் பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, அத்தியாவசிய சேவையின் பொருட்டு பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றில் பணியாற்றும் அதிகமான ஊழியர்கள் விடுமுறை நாட்களிலும் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றதனையும் காணமுடிந்தது.

No comments: