News Just In

4/20/2020 12:47:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழமைக்கு மாறாக அதிகளவானோரால் நிரம்பிய மதுபானசாலைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளதுடன் நீண்ட வரிசையில் நின்று அதிகளவானோர் மதுபான கொள்வனவில் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிந்தது.

மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்ததையும் போக்குவரத்து சாதாரணமாக இடம்பெற்றதையும் அவதானிக்க முடிந்ததுடன் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டாததையும் அவதானிக்க முடிந்தது.

இது தொடர்பாக அவர்களிடம் வினவியபோது தங்களின் விடுகளில் போதியளவான பொருட்கள் கொள்வனவு செய்து வைத்திருப்பதாகவும் இன்னும் இரண்டு வாரத்திற்கு போதுமான பொருட்கள் தங்களிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

மருந்தகங்கள், புடவைக்கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பூட்சிற்றிகள், சந்தைகள் சிகையலங்கார கடைகள், மதுபானக்கடைகள் என்பன திறக்கப்பட்டிருந்ததுடன் நகரப்பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

மதுபானக்கடைகளில் காலையில் அதிகளவானோர் நீண்ட வரிசையில் காணப்பட்டபோதிலும் நண்பகல் அளவில் இந்த அளவு சற்று குறைவாக காணப்பட்டது. குறிப்பாக, வழமைக்கு மாறாக மாவட்டத்திலுள்ள மதுபான சாலைகள் அதிகளவானோரால் நிரம்பிக் காணப்பட்டது.

No comments: