கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் காசல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு (ஐடிஎச்) உடனடியாக மாற்றப்பட்டார். எனினும் காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் (காசல் வீதி மகளிர் வைத்தியசாலை (போதனா) கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அந்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

No comments: