விமான நிலையத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,
விமான நிலையத்தில் வைத்தே பயணிகளிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்படும். பயணிகளின் சளி மாதிரிகளைப் பெற்றுக் கொண்டு அவற்றைக் கொண்டு பரிசோதனை நடாத்தி அவை குறித்த அறிக்கைகள் களஞ்சியப்படுத்தப்படும்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் சர்வதேச குடிப்பெயர் அமைப்பு ஆகியனவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் தங்கியுள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காக வெளிநாட்டு தூதரகங்களின் ஊடாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: