News Just In

4/19/2020 05:59:00 PM

இன்று மாத்திரம் 15 பேருக்கு கொரோனா; பாதித்தோர் எண்ணிக்கை 269ஆக உயர்வு


கொரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் இன்று (ஏப்ரல் 19) ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 269 ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அனைவரும் கொழும்பில் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

91 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

171 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: