News Just In

2/12/2020 03:41:00 PM

யாழ்.பல்கலைக்கழக மாணவிகளின் கைப்பேசிகள் திருட்டு-நால்வர் பிடிபட்டனர்!


யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பல்கலைக்கழக மாணவிகளின் அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவிகளின் கைப்பேசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதியப்பட்டிருந்தன.

அவை தொடர்பாக விசாரணைகளைத் துரிதப்படுத்திய யாழ்ப்பாண பொலிஸார், நல்லூர் பின் வீதி பகுதியில் இருவரைக் கைது செய்ததுடன் திருட்டுப் பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். நகர்ப் பகுதியில் உள்ள கைப்பேசி விற்பனை நிலைய உரிமையாளர்கள் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல்கலைக்கழக மாணவிகளின் கைப்பேசிகளைத் திருடியதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

No comments: