News Just In

2/12/2020 04:09:00 PM

மட்டு-ஊரணியில் கட்டளையை மீறி ஓடிய நபர்-துரத்தி பிடித்த பொலிஸார்!


மட்டக்களப்பில் இன்று போக்குவரத்து பொலிஸாரின் சமிக்ஞையை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றவரை பொலிஸார் மடக்கி பிடித்த சம்பவம் இன்று(12) நடந்துள்ளது.

மட்டக்களப்பு ஊரணி மட்டு-திருமலை பிரதான வீதியில் கடமைக்கு நிற்கும் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபரை நிற்கும்படி சமிக்ஞ்சை காட்டிய போது அவர் அதனை மீறி மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளார். 

அதன் பின் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்த பொலிஸார் குறித்த நபரை மடக்கி பித்துள்ளனர், பிடிபட்ட நபர் மதுபோதையில் இருந்ததாகவும், அவருக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: