News Just In

2/12/2020 03:20:00 PM

மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் சவால்கள் பற்றிய கலந்துரையாடல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
பாதிக்கப்பட்ட சமூகம் தொடர்பான புரிதலுக்காகவும் அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் சவால்களை வெளிக் கொண்டு வருவதற்காகவும் தாங்கள் முனைவதாக தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் கே. நிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக எதிர்வரும் கிழக்கு மாகாணம் சார்பில் எதிர்வரும் சனிக்கிழமை 22.02.2020 மட்டக்களப்பில் அச்சு, இலத்திரனியல் ஊடகங்கள், சமூகவலைத்தளங்களோடு பயணிப்பவர்களுடன் கலந்துரையாடல் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவ்வமைப்பின் சார்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் சவால்கள் பற்றிய கிழக்கு மாகாணம் தழுவிய இந்த விழிப்புணர்வுக்காக இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவரான வேலு குமுதினி தெரிவித்தார்.

தங்களுக்கு சமூக சேவைப் பிரிவிலிருந்து கிடைத்துள்ள புள்ளிவிவரப்படி கிழக்கு மாகாணத்தில் ஒட்டு மொத்தமாக 18 ஆயிரத்து ஒருவர் (18,001) மாற்றுத் திறனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதேவேளை வடக்கு மாகாணத்தில் ஒட்டு மொத்தமாக 20 ஆயிரத்து 17 பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளார்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக குமுதினி மேலும் தெரிவித்தார்.

யுத்தத்திற்குப் பின்னரான சமூக வாழ்வியலில் மாற்றுத் திறனாளிகள் அதிக சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் எனினும் அவை பொதுவெளியில் உரிய கரிசனைக்கு கொண்டு வரப்படாதது பெரும் கவலையளிப்பதாகவும் குமுதினி மேலும் தெரிவித்தார்.

No comments: