மட்டக்களப்பு நோக்கி மகள், மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது அதே திசையில் பயணித்த கார் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரையும் கார் மோதி இழுத்து சென்று இறுதியில் வேலி கட்டையுடன் மோதி கார் நின்றதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் கல்முனை- சென்றல் கேம்ப் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.
காரில் பயணித்தவருக்கு பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த காயமடைந்த மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: