பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கான தகுதிகளை பரீட்சிப்பதற்காக 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச சேவைகளில் இணைத்துக் கொள்வதற்காக குறித்த பட்டதாரிகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பயிற்சிகளில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
பட்டதாரிகளுக்கு பல்வேறு அரச நிறுவனங்களின் முகாமைத்துவம், தொழில்நுட்பப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.
No comments: