News Just In

1/29/2020 08:33:00 AM

களுவாஞ்சிகுடியில் "பசுமையான கிழக்கு"-மாகாண மரநடுகை நிகழ்ச்சித்திட்டம் !


கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் ""பசுமையான கிழக்கு" எனும் தொனிப்பொருளிலான மாகாண மரநடுகை நிகழ்ச்சித்திட்டமானது களுவாஞ்சிக்குடி-மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் (28.01.2020) பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எருவில் கோடைமேடு பிரதேசத்தில் இடம்பெற்றது.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கா.அ .யூ இன்பராசா அவர்களின் ஒழுங்கமைப்பில் கோடைமேடு கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பூரண பங்களிப்புடன் இடம்பெற்ற இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் , கிராம சேவை உத்தியோகத்தர் , அலுவலக உத்தியோகத்தர்கள் , பாடசாலை அதிபர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவிலும் இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்தது வைக்கப்பட்டது.




















No comments: