படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவர், இரு தினங்களுக்கு பின்னர் இன்று (25) அதிகாலை புத்தளம் சிறுகடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம், முள்ளிபுரத்தினை சேர்ந்த 60 வயதுடைய எஸ்.ஜீ.எம். ரபீக் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். படகு கவிழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது....
கடந்த 23ஆம் திகதி புத்தளம், முள்ளிபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற வேளையில் காற்றின் வேகம் காரணமாக படகு கவிழ்ந்தது.
தந்தையும் மகனும் நீந்தி கரையை அடைய முற்பட்ட போதிலும் தந்தைக்கு நீந்த முடியாமல் போனதால் கடலில் மூழ்கியுள்ளார். இதேவேளை மகன் நீந்தி மாம்புரி கடற்கரையை அடைந்துள்ளார்.
புத்தளம் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், குறித்த மீனவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஸாம் முன்னிலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்று பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
1/25/2020 02:29:00 PM
படகு கவிழ்ந்ததில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: