யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாதிருப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர், சி.யமுனானந்தன் தெரிவித்தார்.
சீனாவை தாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகின் பல நாடுகளில் பரவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சீனா முழுவதும் 1287 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தீவிரமாக பரவிவந்த கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான், இந்தோனேசியா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் மற்றும் பிரான்ஸில் இரு நகரங்களில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

No comments: