திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாயோடு ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவன் அலரி விதைகள் சாப்பிட்ட நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அவசரப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கந்தளாய் மூன்றாம் குலனி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே இவ்வாறு அழறி விதைகளை உட்கொண்டுள்ளதாகவும் இச்சம்பவம் நேற்றிரவு (11) இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
அலரி விதைகளை உட்கொண்ட இளைஞன் தினமும் தாயிடம் பணம் கேட்டு சண்டை பிடிப்பதாகவும் சம்பவதினமும் பணம் கேட்டு சண்டையிட்ட நிலையிலே தாய் பணம் கொடுக்க மறுத்ததையடுத்தே அலரி விதைகளை உட்கொண்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்னர்.

No comments: